12 July 2010

அவன்


பூக்களை போல
மென்மையானவன் அவன்…
மண் கீழ் வேரை போல
உறுதியானவன் அவன்…
சின்ன புயலை போல
செல்ல சண்டை செய்பவன் அவன்…
சின்ன சின்ன ஊடல்களுக்கு கூட
என்னை ஏங்க வைப்பவன் அவன்…
என் எண்ணங்களுக்கு முகவரி
அறிந்தவன் அவன்…
தாயின் தழுவல்களை போல கதகதப்பானவன் அவன்…
தந்தையை போல் அடம் பிடிக்கையிலும்
அடக்காது ரசிப்பவன் அவன்
ஆனாலும் கண்டிப்பானவன் அவன்…
பெண்மையின் மென்மை
உணர்ந்தவன் அவன்…
என் தனிமைக்கு நட்பு பூண்டவன் அவன்…
தன் ரகசியம் அனைத்தும்
எனக்கு மட்டும் சொல்பவன் அவன்…
அழகிழந்த தருணங்களிலும்
அழகி என்பவன் அவன்…
காதோர நரையின் பின்னும்
காதல் நரைக்காதவன் அவன்…
என் செல்ல விவாதங்களை
சலிக்காமல் எதிர்ப்பவன் அவன்…
என் சின்னச் சின்ன கனவுகளை கூட
செயலாக்குபவன் அவன்…
என் கண்ணீர் என் புன்னகை எல்லாவற்றிலும்
உடனிருப்பவன் அவன்…
உறக்கத்திலும் என்னை
மறக்காதவன் அவன்…
கடுஞ்சொல் அறியாதவன் அவன்…
மழை கண்ட நிலம் போல்
இணக்கமானவன் அவன்…
என் உடல் சுமக்கும்
இன்னுமொரு உயிரானவன் அவன்..
எனக்கு மட்டும் அழகானவன் அவன்…
எனக்காக மட்டும் முழுமையானவன் அவன்…
எனக்கு மட்டும் காதல் சொல்ல வந்தவன் அவன்…
அவன் தான் என்னை எனக்கு
மறுபடியும் அறிமுகப்படுத்திய இனியவன்…

++++++

5 comments:

  1. அருமையான வரிகள்
    அவன் கொடுத்து வைத்தவன்

    ReplyDelete
  2. என் பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும் ...

    பாரதி கணட வீர பெண்ணே ....

    என் பின்னூட்டம் : http://forum.padukai.com/topic2513.html

    ReplyDelete
  3. கருணையூரான்15 Aug 2010, 16:38:00

    ஓ ...அருமை....அருமை தொடரட்டும்

    ReplyDelete
  4. கவிதையில ஏன் இவ்ளோ நீளம்? எடிட் பண்ணலாமே? வெளிப்படையா சொல்றதுக்கு மன்னிக்கணும்...

    ReplyDelete